×

ஜெயங்கொண்டத்தில் கருகி வரும் நெற்பயிர்கள்.: மின்சாரம் முறையாக கிடைக்கவில்லை என விவசாயிகள் புகார்

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தொடர் மின்வெட்டு காரணமாக தண்ணீர் பாய்ச்ச முடியாததால் நெற்பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் ஜெயங்கொண்டம் அருகே முத்துவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் 200 ஏக்கர் இடங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் நன்றாக வளர்ந்து வரும் நிலையில் மின்சாரம் பற்றாக்குறையால் வயல்கள் வறண்டு வெடித்து நெற்பயிர்கள் கருகுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் விநியோகம் சரிவர கிடைப்பதில் என்று அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசு உடனடியாக மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மாற்றிவிட்டு மின்சாரத்தை முறையாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும் என்றும் விவசாயிகள் கூறி இருக்கின்றனர்.


Tags : electricity Farmers , Farmers ,complain ,powerless ,electricity
× RELATED ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப்...