×

கொரோனா ஆரம்பக் கட்ட நோயாளிகளுக்கு ரெம்டெவிசிர்: சுகாதார அமைச்சகம் பரிந்துரை

புதுடெல்லி: கொரோனாவால் பாதிக்க நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஏற்கனவே பரிந்துரை செய்திருந்த அஜித்ரோமைசினுடன், ஹைட்ராக்சி குளோரோகுயினை சேர்ந்து பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறை நீக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரம்பக் கட்ட நோயாளிகளுக்கு ‘ரெம்டெவிசிர்’ மருந்தை பயன்படுத்தலாம் என சுகாதார அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

அது தனது பரிந்துரையில் மேலும், ‘ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு கட்டுப்பாடுகளின் அடிப்படையில் ரெம்டெவிசிர் மருந்தை பயன்படுத்தலாம். ஆனால், நோய் பாதிப்பு அதிகரித்து மோசமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இதை பயன்படுத்தக் கூடாது. சிறுநீரக கோளாறு, கல்லீரல் பாதிப்பு, கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள், 12 வயதுக்கு உட்பட்டோருக்கு இந்த மருந்து பரிந்துரை செய்யப்படவில்லை,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : stage patients ,Ministry of Health , Remediation ,coronary ,Ministry ,Health
× RELATED பாலஸ்தீனியர்கள் பலி 30 ஆயிரத்தை கடந்தது