×

ரிவர்ஸ் வேக்ஸினாலஜி முறையில் பரிசோதனை தீவிரம்; விரைவில் கொரோனாவுக்கு மருத்து...எம்ஜிஆர் பல்கலை. துணைவேந்தர் சுதா சேஷையன் தகவல்

சென்னை: சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் இதுவரை 78 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதித்துள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,20,922 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 9195 பேர் உயிரிழந்த நிலையில் 1,62,379 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த கொடிய வைரசை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, ரிவர்ஸ் வேக்ஸினாலஜி முறையில், கொரோனா வைரஸை தடுக்கும் புரதம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில், முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி அடைந்துள்ளது. இந்த மருந்து ஓராண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும். மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் தொடங்கும் என கடந்த ஏப்ரல் மாதம் எம்ஜிஆர் பல்கலை. துணைவேந்தர் சுதா சேஷையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விரைவில் கொரோனாவுக்கு மருத்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையன் தகவல் தெரிவித்துள்ளார். ரிவர்ஸ் வேக்ஸினாலஜி ஆராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரிவர்ஸ் வேக்ஸினாலஜி முறையில் கண்டறியப்பட்ட புரதத்தை பரிசோதனை செய்யும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட ஆராய்ச்சி பணிகள் இன்னும் முடியவில்லை. விலங்குளை கொண்டு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆராய்ச்சி பணிகள் முடிந்தவுடன் விவரங்களை தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.  

இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள்;

மத்திய இஸ்ரேலில் உள்ள, பார் இலன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரசின் மூலக்கூறுகளை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளனர். இந்த வைரசின் ஆன்டிஜன், புரதசத்துகள் மற்றும் ஆற்றல் மிகுந்த 2 எபிடோப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் விரைவில் கொரோனாவுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்க முடியும் என்றும் இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Vice Chancellor , Experimental intensity in reverse vaccineology; Soon to the corona ... MGR University. Vice Chancellor Sudha Cheshire Information
× RELATED மீனவர்கள் மீன் வளர்ப்பில் நவீன...