×

‘யார் பெரிய தாதா’ என்பதில் கோஷ்டி மோதல் ரவுடி சரமாரி வெட்டி கொலை: 4 பேர் படுகாயம்; 2 பேர் கைது

பெரம்பூர்: சென்னை கொளத்தூர் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (எ) ரெட்டேரி ரமேஷ் (23). இவருக்கு மனைவி மற்றும் ஒன்றரை வயதில் குழந்தை உள்ளனர். இவர்களது உறவினர் அபினாஷ் (24), அதே பகுதியில் வசித்து வருகிறார்.  ரமேஷின் மாமியார் வீடு மாதவரம் வஜ்ஜிரவேல் நகரில் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ரமேஷ், அபினாஷ் மற்றும் அவர்களது நண்பர் சரண் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அங்கு, பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஐதர்அலி என்பவருடன் ரமேசுக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு போதையில் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஐதர் அலியுடன் அவரது நண்பர்களான வெல்டிங் சுரேஷ், பாரதி, சரவணன் ஆகியோரும் சேர்ந்து ரமேஷ் தரப்பினரிடம் தகராறு செய்துள்ளனர்.அப்போது, ‘உங்களை கொலை செய்யாமல் விடமாட்டேன்,’ என கூறியபடி ரமேஷ், அபினாஷ், அவரது நண்பர் ஆகியோர் அங்கிருந்து கொளத்தூர் வீட்டுக்கு வந்து, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை எடுத்து கொண்டு, மேலும் 10 ேபரை அழைத்துக்கொண்டு இரவு 11 மணியளவில் மீண்டும் மாதவரம் வஜ்ஜிரவேல் நகருக்கு புறப்பட்டனர்.

கொளத்தூர் சத்ய சாய் நகர் அருகே சென்றபோது, எதிரில் வந்த ஐதர்அலி மற்றும் அவரது நண்பர்கள், ரமேஷ் தரப்பினரை வழிமடக்கி கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அபினாஷ், சரண் ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் எதிர் தரப்பை சேர்ந்த ஐதர் அலி, உக்கா சுரேஷ் உள்ளிட்ட 2 பேருக்கும் வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த கொளத்தூர் போலீசார், ரமேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டுகாயமடைந்த அபினாஷை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும், சரணை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொளத்தூர் காமராஜர் நகர் ஓடைப்பகுதியை சேர்ந்த சரவணன் (30), பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்த பாரதி (30) இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முக்கிய குற்றவாளியான ஐதர் அலி, உக்கா சுரேஷ், கார்த்திக் என்கிற மேள கார்த்திக்,   உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். கொலையான ரமேஷ், படுகாயமடைந்த அபினாஷ் மீது மாதவரம், ராஜமங்கலம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ‘யார் பெரிய தாதா’ என்ற தகராறில் இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.


Tags : Clash ,Yari Peri Dada ,clashes ,daddy , Who clashes, big daddy,2 arrested
× RELATED நுங்கம்பாக்கம் செயல் வீரர்கள்...