×

பிரபல நடிகை காரில் 96 பீர், 8 மதுபாட்டில் பறிமுதல்: வாகன சோதனையின்போது சிக்கியது

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் போலீசாரின் வாகன சோதனையின்போது, ரஜினி பட வில்லி நடிகையின் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வருவது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஊரடங்கு காரணமாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் மது பானங்களை கடத்தி வந்து, சென்னையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க, சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது, மதுபானம் கடத்தி வரும் நபர்கள் பிடிபட்டால், அவர்களை கைது செய்து, மதுபானம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இரவு கானத்தூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு சொகுசு காரை மறித்து விசாரித்தனர். அதில், நடிகர் ரஜினியுடன் வில்லியாக நடித்த பிரபல நடிகை மற்றும் அவரது சகோதரி ஆகியோர் இருந்தனர். காரை சோதனையிட வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதையும் மீறி போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் 96 பீர் பாட்டில்கள், 8 மது பாட்டில்கள் பதுக்கி எடுத்து செல்வது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த சென்னை அபிராமபுரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர். சிறிது நேரத்தில் அவரை ஜாமீனில் நடிகை அழைத்து சென்றார்.

Tags : actress ,vehicle test , Famous actress's ,car seized, 96 beers, 8 bottles, wine, vehicle test
× RELATED நீலகிரியில் ஆய்வு செய்து விட்டு...