×

காரில் கஞ்சா கடத்திய நடிகை, டிரைவர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி பஸ் நிலையம் அருகே போலீசார் நேற்று  அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் படி வந்த கா்ரை நிறுத்தி சோதனையிட்டபோது ஒரு பெண் மற்றும் டிரைவர் இருந்தனர். அந்த பெண்ணின் கைப்பையில் ஒரு கிலோவுக்கும்  மேல் கஞ்சா இருந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்தனர். இதில்  அந்த பெண்ணின் பெயர் சரிதா சலீம்(28) என்பதும், டிரைவர் பெயர் சுதீர்  சரபுதீன்(45) என்பதும் ெதரிந்தது.

சரிதா சலீம் சினிமா மற்றும் டிவி தொடர்களுக்கு துணை நடிகர்களை ஏற்பாடு செய்து வருபவர். மேலும் சில மலையாள திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர்கள்  இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கிவந்து கேரளாவில் விற்பனை செய்து  வந்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Actress , Actress ,driver arrested, kidnapping car
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...