×

‘ரன் டு தி மூன்’ஓட்டத்தில் கோபிசந்த், அஷ்வினி

மும்பை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு ஊழியர்களுக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற உள்ள  புதுமையான மாரத்தான் ஓட்டத்தில் பேட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த், அர்ஜுனா விருது பெற்ற தடகள வீராங்கனை அஷ்வினி நாச்சப்பா மற்றும்  பாரா தடகள வீராங்கனை மாலதி ஹொல்லா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.‘ரன் டு தி மூன்’ என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு,  ஜூலை 21, 2020 அன்று, மனிதன் சந்திரனில் கால் பதித்த 51ம் ஆண்டு விழாவை குறிக்கிறது.  பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரமான 3,84,400 கி.மீ. அளவுக்கு பங்கேற்பாளர்கள் ஒட்டுமொத்தமாகக் கடப்பதே இந்த ஓட்டத்தின்  பின்னனியில் உள்ள கருத்தாகும். இந்த ஓட்டம் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 20 ஆம் தேதி நிறைவு பெறும். மேலும், தொழில்முறை  மற்றும் தொழிற்சாரா ஓட்டப்பந்தய வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

கட்டணம் ₹100. ஜூன் 18 வரை பதிவு செய்யலாம். தினசரி ஓட வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், ஒரு மாத காலத்தில் வீரர்கள்  குறைந்தபட்சம் 65 கி.மீ. கடக்க வேண்டும். வெற்றிகரமாக ஓட்டத்தை முடிப்பவர்களுக்கு ஒரு டி-ஷர்ட், முகக் கவசம் மற்றும் இ-சான்றிதழ்  வழங்கப்படும். ஒரு குறிப்பிட்ட நாளில் தாங்கள் கடந்த தூரம் தகுதியாவதற்கு ஒரு ஓட்டப்பந்தய வீரர் குறைந்தபட்சம் 2.5 கி.மீ, அதிகபட்சம் 10 கி.மீ.  அந்த நாளில் பதிவு செய்ய வேண்டும். இந்த ஓட்டத்துக்கு ஐடிபிஐ பெடரல் லைப் இன்சூரன்ஸ் மற்றும் என்இபி ஸ்போர்ட்ஸ் ஏற்பாடு செய்துள்ளன.  பதிவுக்கு:  https://www.nebsports.in/run-to-the-moon/

Tags : Ashwini ,Moon'Online Gopichand , Moon'Online ,Gopichand, Ashwini
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்