×

ட்வீட் கார்னர்...அப்ரிடிக்கு கொரோனா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும் ஆல் ரவுண்டருமான ஷாகித் அப்ரிடி (40 வயது), தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தகவல் பதிந்துள்ளார். ‘கடந்த வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நலம் சரியில்லை. கடுமையான உடல்வலியால்  அவதிப்பட்டேன். பரிசோதனையில்...

துரதிர்ஷ்டவசமாக கோவிட்-19 பாசிட்டிவ் ஆக வந்துள்ளது. விரைவில் குணமாக உங்கள் அனைவரின்  பிரார்த்தனையும் தேவை, இன்ஷாஅல்லா’ என்று ட்வீட் செய்துள்ளார். அப்ரிடி அறக்கட்டளை மூலமாக நேரடியாகக் களத்தில் இறங்கி  ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கி வந்த அப்ரிடிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, அனைவரையும்  அதிர்ச்சியடைய வைத்துள்ளது.



Tags : Corner ,Corona ,Afridi , Tweets, Corner , Corona ,Afridi
× RELATED பாலியல் வன்கொடுமை வழக்கில்...