×

தொழிற்சாலையில் 95 பேருக்கு கொரோனா; 10,000 தொழிலாளர்களை தனிமைப்படுத்த உத்தரவு: கர்நாடகாவில் அதிரடி

பல்லாரி: கர்நாடகாவின் சண்டூரில், இரும்பு உற்பத்தியில் நிறுவனமான ஜிந்தால் தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த ஜூன் 4ம் தேதி, முதல்  கொரோனா பாதிப்பு பதிவானது. இருப்பினும், தொழிற்சாலை தொடர்ந்து இயங்கியது. இதனால், மற்ற  தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் என மொத்தம் 95 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. இதையடுத்து, தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலையில்  பணியாற்று  ரம் தொழிலாளர்களை தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இப்பிரச்னை பற்றி தொழிற்சாலை நிர்வாகத்துடன் வனத்துறை அமைச்சர் ஆனந்த்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், தொழிற்சாலைக்கு சொந்தமான சஞ்சீவினி மருத்துவமனையை, கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றி, தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Karnataka ,factory ,Corona , Corona,95 in factory, Order, isolate 10,000 workers: Action,Karnataka
× RELATED விடாமல் மிரட்டும் கொரோனா; கர்நாடகா...