×

ரஷ்யாவுக்கு போட்டியாக அமெரிக்காவும் மருந்து தயாரிப்பு: ஜூலையில் 30,000 பேரிடம் சோதனை

வாஷிங்டன்: ரஷ்யாவை தொடர்ந்து அமெரிக்க நிறுவனம் ஒன்று, கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் வெற்றிகரமாக சோதனையை முடித்துள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் 30,000 பேரிடம் இந்த சோதனை இறுதிக்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த, மோடெர்னா இன்க் என்ற மருந்து நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி விலங்குகளிடம் சிறப்பான பலனை தந்துள்ளது. அது விலங்குகளுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தவில்லை. அதேசமயம் கொரோனாவையும் எதிர்த்து சிறப்பாக போராடியது.

சார்ஸ் வைரசை அடிப்படையாக கொண்டு இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி தற்போது தன்னார்வலர்களிடம் பரிசோதனையில் உள்ளது. இதிலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதையடுத்து, அடுத்த மாதம் சாதாரண மனிதர்கள் 30,000 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. இதில் சிறப்பான முடிவுகள் வெளிவந்தால், உடனடியாக மருந்து தயாரிப்பு நிலைக்கு செல்லும் என்ற மகிழ்ச்சியான செய்தியை மோடெர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உலகம் முழுவதும் புதிய நம்பிக்கையை தந்துள்ளது.

ஏற்கனவே ரஷ்யாவில் அவிபாவிர் என்ற பெயரில் புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு அந்நாட்டு அரசு அங்கீகாரமும் வழங்கி உள்ளது. வல்லரசு நாடுகளின் அதிரடியான இந்த மருந்துகள் உலகம் முழுவதும் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : drug makers ,Russia ,US , US drug , compete,Russia,test , 30,000 people,July
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...