×

சிபிசிஐடி அலுவலக பூட்டை உடைத்து ஆவணங்கள் திருட்டு?...விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர்:  விருதுநகரில் சிபிசிஐடி அலுவலக பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சூலக்கரை போலீஸ் நிலையம் அருகே குற்றப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு துறை அலுவலகம் (சிபிசிஐடி) உள்ளது. இங்கு மதுரை டிஎஸ்பி (பொ), ஒரு பெண் இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்ஐ மற்றும் 7 போலீசார் பணியில் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு பூட்டிய சிபிசிஐடி அலுவலகத்தை, இரவு 9 மணியளவில் திறக்க காவலர் வந்தார். அப்போது அலுவலகத்தின் கதவு உடைந்து திறந்து கிடந்தது.

தகவலறிந்து விருதுநகர் எஸ்பி பெருமாள், சிபிசிஐடி(பொ) டிஎஸ்பி சரவணன் வந்து பார்வையிட்டனர். சிபிசிஐடி அலுவலக பூட்டை, அங்கு வழக்குகளில் கைப்பற்றி நிறுத்தப்பட்டுள்ள கார்களில் இருந்து ஜாக்கி, ஸ்பானரை எடுத்து உடைத்து லாக்கை கழற்றியிருப்பது தெரிய வந்தது. அவற்றை இன்ஸ்பெக்டர் டேபிளில் வைத்து சென்றுள்ளனர். சிபிசிஐடி அலுவலக வளாகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் எதுவும் திருடு போகவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். இங்குதான் பல முக்கிய வழக்குகளின் விசாரணை நடந்தது. மேலும், தற்போது சில வழக்குகளும் விசாரணையில் இருக்கின்றன.

எந்த காரணத்திற்காக சிபிசிஐடி அலுவலக கதவை உடைத்தனர்? உடைக்க பயன்படுத்திய பொருட்களை தூக்கி எறியாமல் இன்ஸ்பெக்டர் மேஜையில் வைத்து சென்றதன் அவசியம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.அத்துடன்  இன்ஸ்பெக்டர் மீது அதிருப்தி உள்ளோர் செய்த வேலையா அல்லது வழக்கு ஆவணங்கள் திருடு போனதை சிபிசிஐடி அதிகாரிகள் மறைக்கிறார்களா என்ற தொடர் கேள்விகள் எழுகின்றன. பூட்டு உடைக்கப்பட்டதை தொடர்ந்து சிபிசிஐடி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Tags : Theft ,CBCID , Theft , CBCID office lock , theft , documents?
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...