×

காவல் நிலையத்தில் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் பதிவு போலீஸ் தொப்பியை நான் போடுவேன்.. டென்ஷன் ஆனா போலீசையே போடுவேன்..வைரலாக பரவியதால் வாலிபர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே போலீஸ் ஸ்டேசனில் தொப்பியை திருடி போட்டு வீர வசனம் பேசி சமூக வலைதளத்தில் பரவவிட்டவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை அருகே மணல்மேடு பூதங்குடியை சேர்ந்த செல்வமணி மகன் சிவா(24). இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார். அந்த போட்டோவில் ஒரு காவல் நிலையத்தின் வரவேற்பாளர் பகுதியில் சிவா நின்றுகொண்டு அங்கிருந்த போலீஸ்தொப்பியை தலையில் போட்டுக்கொண்டு போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோவை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன்கீழ், போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தொப்பியை போட முடியுமா..., நான் போடுவேன்....ரொம்ப டென்ஷன் ஆனா... போலீசையும் போடுவேன்’’ என்ற டயலாக்கையும் எழுதி, அதை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். மேலும் அவர் தனது நண்பருடன் மது குடிப்பது போன்று உள்ள ஒரு புகைப்படத்தை செல்பி எடுத்து அதன் கீழ் இந்த ஜென்மத்தில் எவனும் எங்கள ஒன்னும் பண்ண முடியாது ஓ.கே. என்று எழுதி வெளியிட்டுள்ளார்.

இது வாட்ஸ்அப்பிலும் பரவியது. இந்த வாட்ஸ்அப் போட்டோ மணல்மேடு போலீஸ் உதவி ஆய்வாளர் ஹானிஸ் உசேன் வாட்ஸ்அப்பிற்கும் வந்ததையடுத்து சிவா மீது மணல்மேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவரை விசாரித்தனர். மணல்மேடு போலீஸ் ஸ்டேசனில் கெத்துக்காட்டியது தெரியவந்ததால் அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Tags : police station , photo, police , police station , police cap , Facebook.
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை