×

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை இப்போது நடத்த வாய்ப்பில்லை: செயலாளர் நந்தகுமார் பேட்டி

சென்னை: குரூப் 1 தேர்வு, குரூப் 2 தேர்வு, குரூப் 2ஏ தேர்வு, குரூப் 4 தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் கொரோனா தாக்கம் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: டிஎன்பிஸ்சி தேர்வு தற்போதைக்கு நடத்த வாய்ப்பு இல்லை கொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழல் சரியான உடன், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்படும்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு நிச்சயமாக தேர்வுகள் நடைபெறும். தேர்வு நிச்சயம் நடைபெறும் என்பதால் தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். தேர்வுக்கு முன்பு நிச்சயமாக 3 மாத கால அவகாசம் வழங்கப்படும். குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு இடையேயும் போதிய கால இடைவெளி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : DNPSC , NNNK Kumar ,Interview , DNPSC Polls
× RELATED இலங்கை பிரதமரை தேர்வு செய்வதற்கான...