×

சேலத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் படம்பிடித்த அரசு கேமராமேனுக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம்: சேலத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் படம்பிடித்த அரசு கேமராமேனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்த பிலிம் டிவிசன் கேமராமேனுக்கு தொற்று உறுதியானது. சேலத்தில் மேம்பாலம் திறப்பு மற்றும் மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டார். முதல்வர் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய சென்னையில் இருந்து கேமராமேன் சேலம் சென்றிருந்தார். ஏற்கனவே அரசு பிலிம் டிவிசனை சேர்ந்த ஒரு ஒளிப்பதிவாளருக்கு கொரோனா உறுதியானது.


Tags : CM Palanisamy ,Corona ,Salem ,Government Cameraman ,event , Salem, CM Palanisamy, Government Cameraman, Corona infection
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...