×

2-ம் கட்ட நகரங்களில் அதிகரிக்கும் கொரோனா; சென்னையில் இருந்து திரும்புவோர் மூலம் பரவல்: முறையாக பரிசோதனை இல்லாததே காரணம்?

நெல்லை: சென்னையில் இருந்து திரும்பிய சுமார் 20 ஆயிரம் பேர் கொரோனா பரிசோதனை எதுவும் இன்றி மதுரைக்குள் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் தான் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2-ம் கட்ட தலைநகரங்களாக இருக்கின்ற மதுரை, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மதுரையை பொறுத்தவரையில் 394 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் ஒற்றை இலக்கில் தான் இந்த கொரோனா தொற்று இருந்தது. ஆனால் தற்போது தினமும் 20,30 என இந்த கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த பலருக்கு முறையான சோதனை நடத்தப்படவில்லை என்பது தான் முதலாவதான குற்றச்சாட்டு. கடந்த மாதத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இங்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு முறையான எந்த பரிசோதனையும் செய்யப்படவில்லை அதனால் தான் இந்த தொற்று என்பது அதிகரித்து வருகிறது.

மேலும் தமிழகத்தில் இருக்கிற மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் மதுரையில் பரிசோதனை என்பது மிக மிக குறைவாகவே நடத்தப்படுகிறது என்ற மற்றோரு குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. அதனால் தான் இந்த கொரோனா தொற்று என்பது 2-ம் கட்ட நகரமாக இருக்கக்கூடிய மதுரை போன்ற நகரங்களில் வந்துள்ளது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் திறக்கப்பட்ட பாதத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள், மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகள் என பலருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. மதுரை மிக முக்கிய சந்திப்புக்கான ஒரு இடமாக இருக்கிறது.

இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் அதிகம் உள்ளனர். சோதனை நடத்தப்படும் இடத்தில் முறையாக பரிசோதனை நடத்தப்படவில்லை. அதே போன்று சென்னையில் இருந்து வரக்கூடியவர்களுக்கு முறையாக நடத்தப்படாதது தான் மதுரை போன்ற தென் மாவட்டங்களில் அதிக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பரிசோதனை முக்கியம் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


Tags : Cities ,Dissemination ,Returners ,Chennai ,Phase , City Phase 2, Corona, Chennai, Experiment
× RELATED கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள்...