×

கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்தது மகாராஷ்டிரா அரசு; உச்ச வரம்பாக ரூ.2,200 நிர்ணயம்

மும்பை: தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ரூ.4,500ஐ கட்டணமாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நிர்ணயித்தது. அதுவே, அரசு ஆய்வகங்களில் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.2,200 உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பலமடங்கு அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் அதற்கு முன்னோடியாக தனி ஒரு மாநிலமாக கொரோனா வைரஸ் பாதிப்பில் அங்கம் பதித்து வருகிறது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்கள், மருத்துவர்கள் பல கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது. மகாராஷ்டிராவில் மேலும் 3493 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணங்களை மகாராஷ்ட்ரா அரசு குறைத்துள்ளது. இதுபற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்ததாவது: மருத்துவமனைகளில் மாதிரிகளை சேகரிக்க ரூ. 2,200 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.

அதுவே வீடுகளுக்கு வந்து மாதிரிகளை சேகரிக்க ரூ. 2,800 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. முன்னதாக முறையே ரூ. 4,500 மற்றும் ரூ. 5,200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட விகிதங்கள் இந்த ஆய்வகங்கள் வசூலிக்கக்கூடிய அதிகபட்சம் என்றாலும், மாவட்ட சேகரிப்பாளர்கள் தனியார் ஆய்வகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணங்களை மேலும் குறைக்க முடியும். தனியார் ஆய்வகங்களில் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலித்தால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மகாராஷ்டிரத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 91 ஆய்வகங்கள் உள்ளன.

Tags : government ,Maharashtra , Corona, Experiment, Maharashtra, Determination
× RELATED நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்