×

முகக்கவசம் பாதுகாப்பு நடவடிக்கையே இத்தாலி, நியூயார்க்கில் கொரோனா தொற்று குறைய காரணம் : அமெரிக்க ஆய்வு முடிவுகள் தகவல்

ரோம் : கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு முகக் கவசம் அணிவது மிகவும் முக்கியமானது என்பது அனுபவப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு  தற்போது 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து அறிவுறுத்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்க முடியாத சூழலில், முகக்கவசம் அணிதலும், தனி மனித இடைவேளிமே நம்மை காத்துக் கொள்ள உதவுகிறது. முகத்தை முகக் கவசத்தால் மூடுவது காற்றில் வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், ஏப்ரல் 6ம் தேதி வடக்கு இத்தாலியில் மற்றும் ஏப்ரல் 17ம் தேதி நியூயார்க் நகரில் முககவசம் அணியும் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன்பிறகு, நோய்த்தொற்று போக்குகள் வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த இரு பகுதிகளுமே, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவையாக இருந்தவை ஆகும். முகக் கவசம் பாதுகாப்பு நடவடிக்கை மட்டும் தொற்றுநோய்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளது.

அதாவது இத்தாலியில் ஏப்ரல் 6 முதல் மே 9 வரை 78,000க்கும் அதிகமானோர் தொற்றிலிருந்து தப்பியுள்ளனர். ஏப்ரல் 17 முதல் மே 9 வரை நியூயார்க் நகரில் 66,000 க்கும் அதிகமானோர் தொற்றிலிருந்து தப்பியுள்ளனர்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் முகக் கவசம் அணிவது நடைமுறைக்கு வந்தபோது, ​​தினசரி புதிய தொற்று விகிதம் ஒரு நாளைக்கு சுமார் 3% குறைந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதேநேரம், நாட்டின் பிற பகுதிகளில், தினசரி புதிய நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்தன.

Tags : Italy ,New York ,US , Surveillance, Defense, Action, Italy, New York, Corona, Infection, USA, Study
× RELATED அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்ம மரணம்