×

கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் கோவை அரசு மருத்துவமனையில் பிரசவங்களின் எண்ணிக்கை 2 மாதங்களில் 1,745 ஆக அதிகரிப்பு!

கோவை: கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை இல்லாத அளவு பிரசவங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் கர்ப்பிணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனையும், கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படுகிறது. இதை தவிர, பிரசவ செலவுகளும் அதிகம். ஏற்கனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த சமயத்தில் கை கொடுத்தது அரசு மருத்துவமனைகள் தான். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் பிரசவம் நடந்துள்ளது.

குறிப்பாக கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இங்கு 1, 745 பிரசவங்கள் நடைபெற்றன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1, 433 பிரசவங்களே நடைபெற்றன. எந்த ஆண்டும் இல்லாத வகையில், மே மாதத்தில் மட்டும் 930 பிரசவங்கள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து, தாய், சேய் இறப்பு விகிதத்தை குறைக்கும் அரசு மருத்துவமனைக்குக்கு மத்திய அரசால் வழங்கப்படும் லக்க்ஷயா சான்றிதழில் கோவை அரசு மருத்துவமனை பிளாட்டினம் தரவரிசை பெற்றுள்ளது. இங்கு 55 சதவீதம் சுக பிரசவமும், 45 சதவீதம் அறுவை சிகிச்சை மூலமும் பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. எனவே நம்பிக்கையுடன் கர்ப்பிணிகள் இங்கு வருகை தருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் உயிரை பணயம் வைத்து சேவையாற்றும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.


Tags : deliveries ,Coimbatore Government Hospital , Corona, Coimbatore Government Hospital, Childbirth, 1,745, Increase
× RELATED ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தில்...