×

தனியார் தொழிற்சாலையில் கிரேன் மோதி சீனாவை சேர்ந்த தொழிலாளி சாவு

திருவள்ளூர்: தனியார் தொழிற்சாலையில் கிரேன் மோதி  சீனாவை சேர்ந்த  தொழிலாளி பலியானார். திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷால் (43). இவர் முருக்கஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நடந்து வரும் கேஸ் பைப் லைன் பதிக்கும் ஒப்பந்த பணியில் திட்ட மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம், சீனாவைச் சேர்ந்த பெங்குவிங்சன் (38) என்பவர் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெங்குவிங்சன் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ரிமோட் மூலம் கிரேனை இயக்கினார்.

எதிர்பாராதவிதமாக கிரேன் அவரது தலையில் மோதியது. இதில், படுகாயமடைந்த பெங்குவிங்சனை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து, மணவாள நகர் போலீசில் விஷால் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு சம்பவம்: திருவள்ளூர் அடுத்த திருவூர் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ் (48). பாப்பரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் காலை இவரது பைக்கில் வேலைக்கு சென்று கெண்டிருந்தார்.   பாப்பரம்பாக்கம் வாட்டர் டேங்க் அருகே சென்றபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே தாஸ் இறந்தார்.

 இதுகுறித்து, மணவாள நகர் போலீசில் இவரது சகோதரர் அன்பு அளித்த புகாரையடுத்து, போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ஆவடி: ஆவடி அருகே கோவர்த்தனகிரி, கலைஞர் நகர், டிஆர்ஆர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (47). இவர், ஆவடி மாநகராட்சியில் பருத்திப்பட்டு பூங்காவில் ஒப்பந்த தோட்டக்காரராக பணியாற்றி வந்தார். நேற்று ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் நகர், 4வது சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார். அப்போது பூந்தமல்லியில் இருந்து ஆவடி நோக்கி வந்த ஒரு டெம்போ டிராவலர் வேன் இவர் மீது வேகமாக மோதியது. இதில் கண்ணன் வேன் சக்கரத்தில் சிக்கி இறந்தார். டிரைவர் வேனை நடுரோட்டில் விட்டுவிட்டு தப்பிவிட்டார். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : crane worker ,Chinese ,factory , Private factory, crane, china, worker die
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...