×

முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்: அச்சத்தில் பொதுமக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகராட்சி 37வது வார்டு கேஎம்வி நகரில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் 37வது வார்டில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து, சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் உள்ளது.மழை பெய்யும் போதும், பலத்த காற்று வீசும்போதும் மின்கம்பம் ஆடுவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

 இதுபற்றி காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே பழுதடைந்து இருப்பதாலும் இக்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழுந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்துமோ என அப்பகுதி மக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். எனவே, பழுதடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை மாற்றி அமைத்து, பெரும் விபத்தை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


Tags : The Public in Fear ,breakdown ,public , Pole, public
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...