×

கீழே சாயும் அபாயம் பயமுறுத்தும் பட்டுப்போன மரம்: வெட்டி அகற்றப்படுமா?

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் மக்களின் மீது விழ காத்திருக்கும் பட்டுப்போன மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உசிலம்பட்டி-மதுரை சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் நுழைவு வாயிலில் பல வருடங்களாக பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. இந்த சாலையில் அதிகமான போக்குவரத்து உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் பொதுமக்கள் நடந்துசெல்லும் போது, சாதாரண காற்று அடித்தாலே மரக்குச்சிகள் ஒடிந்து விழுகிறது. இதனால் பலமுறை மக்கள் தலையில் குச்சி விழுந்து காயமடைந்துள்ளனர். தற்போது காற்றடி காலம் என்பதால் இந்த மரக்குச்சி மற்றும் பெரிய மரத்தின் காய்ந்து போன கிளையும் ஒடிந்து விழும் அபாயம் உள்ளது.

இதனால் உயிர்ச்சேதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோல் மதுரை சாலையிலுள்ள மலையாண்டி தியேட்டர் எதிரிலும் ஒரு பட்ட மரம் உள்ளது. அதனையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்மந்தமாக பலமுறை அதிகாரிகளுக்கு மக்கள் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். எனவே மரங்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : Township Risk,Traditional Silky Tree, Small Town?
× RELATED கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி...