×

ஜிஎஸ்டி கணக்கு தாக்கலுக்கு தாமத கட்டணம் வசூலிக்கப்படாது: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 40வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. வீடியோ கான்பரன்சிங் மூலம் மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஜிஎஸ்டி நடைமுறைகளை எளிமைப்படுத்துவது, வணிகர்களுக்கு பலன் அளிக்கக்கூடிய சட்டக்குழு பரிந்துரைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, நிர்மலா சீதாராமன் கூறியதாவது:  ஜிஎஸ்டி வசூல் 45 சதவீதம் சரிந்து விட்டது. இதனால், மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க இயலவில்லை. மாநிலங்கள் நிதி திரட்டுவது தொடர்பாக அடுத்த மாதம் விவாதிக்கப்படும்.  வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் ஈட்டாதவர்களாக இருந்து, கடந்த 2017 ஜூலை முதல் கடந்த ஜனவரி மாதம் வரை கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்களுக்கு தாமதக் கட்டணம் கிடையாது.

அதேநேரத்தில், வரி செலுத்தக் கூடியவர்களாக இருந்தால், அவர்களுக்கு தாமதக் கட்டணம் அதிகபட்சமாக 500 மட்டுமே வசூலிக்கப்படும்.
 கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, கடந்த பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்துக்கு கணக்கு தாக்கல் செய்யாத, ஆண்டு வர்த்தகம் ₹5 கோடி வரை உள்ள குறைந்த அளவு வரி செலுத்தும் வணிகர்களுக்கு, தாமதமாக தாக்கல் செய்ததற்கு வசூலிக்கப்படும் அபராத வட்டி 18 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது  செப்டம்பர் 30ம் தேதிக்குள் கணக்கு தாக்கல் செய்தால், மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கு தாமத கட்டணம் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்படும். ஜூன் 12 வரை ஜிஎஸ்டி பதிவு ரத்து செய்யப்பட்டவர்கள், ஒரு முறை வாய்ப்பாக அவற்றை செப்டம்பர் 30 வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றார்.ஜிஎஸ்டி கணக்கு தாக்கலுக்கு தாமத கட்டணம்  வசூலிக்கப்படாது: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 40வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. வீடியோ கான்பரன்சிங் மூலம் மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஜிஎஸ்டி நடைமுறைகளை எளிமைப்படுத்துவது, வணிகர்களுக்கு பலன் அளிக்கக்கூடிய சட்டக்குழு பரிந்துரைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, நிர்மலா சீதாராமன் கூறியதாவது:  ஜிஎஸ்டி வசூல் 45 சதவீதம் சரிந்து விட்டது. இதனால், மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க இயலவில்லை. மாநிலங்கள் நிதி திரட்டுவது தொடர்பாக அடுத்த மாதம் விவாதிக்கப்படும்.  வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் ஈட்டாதவர்களாக இருந்து, கடந்த 2017 ஜூலை முதல் கடந்த ஜனவரி மாதம் வரை கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்களுக்கு தாமதக் கட்டணம் கிடையாது.

அதேநேரத்தில், வரி செலுத்தக் கூடியவர்களாக இருந்தால், அவர்களுக்கு தாமதக் கட்டணம் அதிகபட்சமாக 500 மட்டுமே வசூலிக்கப்படும்.
 கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, கடந்த பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்துக்கு கணக்கு தாக்கல் செய்யாத, ஆண்டு வர்த்தகம் ₹5 கோடி வரை உள்ள குறைந்த அளவு வரி செலுத்தும் வணிகர்களுக்கு, தாமதமாக தாக்கல் செய்ததற்கு வசூலிக்கப்படும் அபராத வட்டி 18 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது  செப்டம்பர் 30ம் தேதிக்குள் கணக்கு தாக்கல் செய்தால், மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கு தாமத கட்டணம் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்படும். ஜூன் 12 வரை ஜிஎஸ்டி பதிவு ரத்து செய்யப்பட்டவர்கள், ஒரு முறை வாய்ப்பாக அவற்றை செப்டம்பர் 30 வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றார்.

Tags : Nirmala Sitharaman , GST Account, Payment, Nirmala Sitharaman
× RELATED 2019ம் ஆண்டுக்கான மாநில வர்த்தக...