×

தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை

பல்லாவரம்: பல்லாவரம் அருகே திருநீர்மலை பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான பள்ளி ஒன்று செயல்படுகிறது. இதில் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் கடந்த 3 மாதங்களாக இந்த பள்ளி மூடப்பட்டுள்ளது.  
இந்நிலையில், நேற்று மாணவர்களின் பெற்றோர் செல்போனுக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதில், பள்ளியை நிரந்தரமாக மூட இருப்பதால், தங்களது குழந்தைகளின் கல்வி மாற்றுச் சான்றிதழை பெற்றுச் செல்லும்படி கூறப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், நேற்று பள்ளி நிர்வாகத்திடம் இதுபற்றி கேட்டபோது, முறையாக பதில் அளிக்கவில்லை, என்று கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது, பள்ளியை மூட மாட்டோம் என்று நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து,  அனைவரும் கலைந்து சென்றனர்.Tags : private school , Parental blockade , private school
× RELATED மறைமலைநகர் அருகே தனியார் பள்ளியை 2வது...