×

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க நிறுவனத்துடன் கைகோர்த்தது இந்திய நிறுவனம்!!

டெல்லி : கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் அமெரிக்க நிறுவனத்துடன் இந்திய நிறுவனம் கைகோர்த்துள்ளது.உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதுவரை டஜன் கணக்கிலான தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு, அவை பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. தற்போது வரை, கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்தும் என்று ஒரு மருந்தும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. எனினும், வருங்காலங்களில் தற்போதைய தடுப்பு மருந்து பலன் தருமா என்பது தெரியவரும்.

இந்தியாவை பொறுத்தவரை தற்போது கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு, மருத்துவமனைகளில் மருந்துகளின் கூட்டு கலவையை உருவாக்கி நோயாளிகளுக்கு செலுத்தும் ஆய்வுகளும் அவ்வப்போது நடந்து வருகிறது.இந்த நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டறியும் முயற்சியில் அமெரிக்க நிறுவனத்துடன் இந்திய நிறுவனம் கைகோர்த்துள்ளது. அமெரிக்காவின் ரெஃபானா என்று நிறுவனத்துடன் டெல்லியை தலைமையிடமாக கொண்ட Panacea Biotec என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

Panacea Biotec நிறுவனமானது ஏற்கனவே டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது. Panacea Biotec நிறுவனம் மருந்தை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கான அனுமதியையும் பெற்றுள்ளது. அதேபோல, அமெரிக்காவில் மருந்து விற்பனையை ரெஃபானா நிறுவனம் கவனித்துக்கொள்ளும். ரெஃபானா நிறுவனத்துடன் கூட்டணி அமைந்துள்ள நிலையில், 500 மில்லியன் மருந்துகளை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக Panacea Biotec  நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ராஜேஷ் ஜெயின் தெரிவித்துள்ளார். மேலும் வருகிற 2021ம் ஆண்டுக்குள் சுமார் 40 மில்லியன் மருந்துகளை முதற்கட்டமாக தயாரிக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.


Tags : company ,Indian ,corporation ,US , Corona, Prevention, Drug, Initiative, American Institute, Indian Institute
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...