×

காசநோய், போலியோ தடுப்பூசிகள் கொரோனா வைரஸுக்கு எதிராக போராட உதவுமா? : அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு

வாஷிங்டன் :கொரோனா வைரஸ் தடுப்புக்கு காசநோய் தடுப்பூசி அல்லது போலியோ தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள், ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் தடுப்புக்கு காசநோய் தடுப்பூசி அல்லது போலியோ தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். காசநோய் தடுப்பூசியை கொரோனா தடுப்புக்கு கொடுத்து சோதிக்கும் பரிசோதனைகள் தொடங்கி இருக்கின்றன என்ற தகவலை ’தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.பலதரப்பட்ட நோய்க்கிருமிகளுக்கு எதிரானதாக உள்ளார்ந்த நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் விதமாக காசநோய், போலியோ தடுப்பு மருந்துகள் கோடிக்கணக்கானோருக்கு உலகம் முழுதும் செலுத்தப்பட்டு வருகின்றன, தற்போது கொரோனா வைரஸுக்கு எதிராகவும் முயற்சி செய்து பார்க்கப்பட்டு வருகிறது.

பேஸிலஸ் கால்மெட்-குயெரின் என்ற பிசிஜி தடுப்பு மருந்து கொரோனா நோயாளிகளுக்கு அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெதர்லாந்து, ஆஸ்திரேலியாவிலும் சோதிக்கப்பட்டு வருகிறது.டெக்சாஸ் ஏ அண்ட் எம் மருத்துவ அறிவியல் மையத்தின் கிருமி நோய் உருவாக்கவியல் மற்றும் நோய் தடுப்பாற்றல்வியல் பேராசிரியர் ஜெஃப்ரி டி.கிரிலியோ கூறும்போது, “பிசிஜி வாக்சைன் மட்டுமே கோவிட்-19-ஐ எதிர்க்க கொடுக்கப்பட தகுதியானது” என்றார்.கோவிட்-19-ஐ முற்றிலும் ஒழிக்க இது பயன்படுமா என்பது தெரியாவிட்டாலும் அதன் தீவிரத்தைக் குறைத்து உடல் நோய் எதிர்பாற்றலே அதை தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : American ,scientists , Tuberculosis, polio, vaccine, corona, American scientists, study
× RELATED மத்திய அரசு வழிகாட்டுதல்படி...