×

கட்டிப்பிடி வைத்தியம் செய்ய சொல்கிறாரா கமல்? அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

மதுரை: அரசை குறை கூறும் கமல், கட்டிப்பிடி வைத்தியம் செய்ய சொல்கிறாரா என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.
மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையிலிருந்து மதுரைக்கு சாலை மார்க்கமாகவும் ரயில் மூலமாகவும் வரும் அனைவரும் பரிசோதிக்கப்படுகிறார்கள். நடிகர் கமல் தன்னுடைய கட்சியில் இருக்கும் 100 நிர்வாகிகளை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அரசை பற்றி குறை கூறி பேசுகிறார். அரசை பற்றி குறை கூறி பேசினால் தான் டிவியில் அவரை காண்பிப்பார்கள். கமல் என்ன எதிர்பார்க்கிறார் என தெரியவில்லை. சினிமா சூட்டிங்கில் நடிப்பது போல கட்டிப்பிடி வைத்தியம் செய்வதை எதிர்பார்க்கிறாரா? அவர் கூறுவதை போல அரசிடம் ஒரு சதவிகித குறை கூட இல்லை. அரசை குறை கூறவும் அவருக்கு யோக்கியதை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Selur Raju ,Kamal , Humpty Medicine, Kamal, Minister Selur Raju
× RELATED குஜராத், ஆந்திரா, பீகார் மாநிலங்களில்...