×

செங்கல்பட்டு-திருச்சி, கோவை-அரக்கோணம் இடையே 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்: பரிசோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதி

சென்னை: செங்கல்பட்டு -திருச்சி, கோவை-அரக்கோணம்  இடையே 3 சிறப்பு ரயில்கள் நேற்று இயக்கப்பட்டன. திருச்சி-செங்கல்பட்டு ரயில் எண் (02606) இடையே அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் தினமும் காலை 7 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தில் புறப்பட்டு அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டுக்கு வந்தடையும். அதேபோல் செங்கல்பட்டு- திருச்சி இடையே ரயில் எண் (02605) அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் மாலை 4.45 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் புறப்பட்டு மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர் வழியாக திருச்சிக்கு சென்றடையும். மேலும், அரக்கோணம்-கோவை இடையே (02675) அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் காலை 7 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையத்தில் புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கும், மறுமார்க்கமாக கோவை-அரக்கோணம் இடையே (02676) அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் பிற்பகல் 3.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அரக்கோணம் வந்தடையும்.

திருச்சி- செங்கல்பட்டு இடையே (06796) அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் காலை 6.30 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், மேல்மருவத்துர் வழியாக செங்கல்பட்டுக்கு வந்தடையும். இதேபோன்று மறுமார்க்கமாக செங்கல்பட்டு-திருச்சி இடையே (06795) அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் பிற்பகல் 2 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, கும்பக்கோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்றடையும். மேலும் மதுரை- விழுப்புரம் இடையே (02636) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தினம் காலை 8 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, அரியலூர் வழியாக விழுப்புரத்துக்கு வந்தடையும். மறுமார்க்கமாக விழுப்புரம்- மதுரை இடையே (02635) இரவு 2.30 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக மதுரைக்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயிலில் பயணிப்பவர்கள் ரயில் நிலையங்களுக்கு முன்கூட்டியே வந்திருந்தனர். ரயில்வே ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெர்மல்ஸ்கேனர் மூலம் அவர்களுக்கு சோதனை செய்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட இ-பாஸ் சரியாக உள்ளதா என்று சரிபார்க்கப்பட்டது. அதன்பிறகு சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் பயணம் செய்தனர். இ-பாஸ் இல்லாமல் பயணம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை திருச்சிக்கு சென்ற சிறப்பு ரயிலில் 618 பேர் பயணம் செய்தனர். இதில், பெரும்பாலானோர் இ-பாஸ் பெறாமல் இருந்தனர் என விசாரணையில் தெரிந்தது.


Tags : Chengalpattu-Trichy ,Coimbatore-Arakkonam ,Coimbatore ,Arakkonam , Special trains,Chengalpattu-Trichy,Coimbatore, Arakkonam
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்