×

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இரண்டு கட்டங்களாக மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்...!!

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் வரும் 16, 17ம் தேதிகளில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வு மற்றும் தொற்றை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார் என தகவல் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்தது நீட்டிக்கப்பட்டு, தற்போது நாடு முழுவதும் வருகிற ஜூன் 30ம் தேதி வரை முடக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. எனினும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பரவலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இரண்டு கட்டங்களாக மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 16ஆம் தேதி பஞ்சாப், அசாம், கேரளா உள்ளிட்ட 21 மாநில முதல்வர்களுடனும், வருகிற 17ஆம் தேதி தமிழ்நாடு, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Modi ,consultation ,State Chiefs ,Corona , Corona, State Chiefs, Prime Minister Modi, Advice, Information
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...