×

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து குருவாயூர் கோயிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!

திருச்சூர் : திருச்சூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து குருவாயூர் கோயிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா நோய் பரவலை தடுப்பதின் ஒருபகுதியாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு அரசு பிறப்பித்தனர். இதையொட்டி அனைத்து புனித மையங்களும் மூட அரசு உத்தரவிட்டிருந்தனர். கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோயிலும் மூடப்பட்டன. இந்தநிலையில் கடந்த தினம் ஊரடங்கு சில தளர்வுகளை ஏற்படுத்தி விதிமுறைகளின் அடிப்படையில் புனித மையங்கள் திறக்கலாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தனர்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குருவாயூர் கோயிலில் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் நாளொன்றுக்கு 600 பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதேபோன்று, 60  திருமணங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும், திருமண நிகழ்ச்சிகளை பொருத்தவரை ஒரு திருமணத்திற்கு 10 நிமிடம் மட்டுமே நேரம் ஒதுக்கப்படும் எனவும்அறிவிக்கப்பட்டு உள்ளது. மணமகன், மணமகள் உட்பட 10 பேருக்கு மட்டுமே திருமணத்தில் பங்கேற்க அனுமதி என்றும், ஆன்லைன் மூலம்  முன்பதிவு செய்த  பக்தர்களுக்கு அனுமதி வழங்க அம்மாநில அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 150 பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்யும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. முக்கியமாக திருச்சூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவிய வண்ணம் இருந்தது. இதனையடுத்து கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக திருச்சூரில் உள்ள குருவாயூர் கோயிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Temple ,administration ,devotees ,Guruvayur temple ,temple administration , Kerala, Guruvayur Temple, Darshan of Darshan, Temple Administration
× RELATED மானாமதுரையில் சோமநாதர் கோயில் தேரோட்டம்