×

கொரோனா பாதிப்புக்கு சித்த மருத்துவ சிகிச்சை...: 7 நாட்களில் குணமடைவதாக சித்த மருத்துவர் பேட்டி

சென்னை: கொரோனா பாதித்தவர்கள் சித்த மருத்துவ சிகிச்சையில் 7 நாட்களில் 7 குணமடைந்து வீடு திரும்புகின்றனர். சென்னை சாலி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள சித்த மருத்துவ மையத்தில், கொரோனா பாதித்த 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள், 7 நாட்களில் குணமடைந்துவிட்டதாக சித்த மருத்துவர் வீரபாபு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், சித்த மருத்துவ சிகிச்சையை சரியாக செய்கிற பட்சத்தில், 7 முதல் 10 நாட்களுக்குள் அனைத்து நோயாளிகளும் பூரண குணமடைவது உறுதியாகியுள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்ட பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 40 பேர் உள்ளனர். இன்று வரை 130 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருமே காய்ச்சல், சளி, இருமல் போன்ற அனைத்து அறிகுறிகளுடன் வந்தவர்கள் ஆவர். 3 முதல் 4 நாட்களில் அந்த அறிகுறிகள் எல்லாம் நீங்கி நலமுடன் உள்ளனர். இன்றைய அறிகுறிகள் நீங்கி நலமுடன் உள்ள 30 பேர் வீட்டுக்கு அனுப்பப்படவுள்ளனர், என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, கொரோனா பாதித்தவர்களுக்கு கபசுர குடிநீர், சிறப்பு மூலிகை தேநீர் மற்றும் மூலிகை கலந்த உணவு தரப்படுகிறது. சூரிய ஒளி சிகிச்சையும் அளிக்கப்படுவதாக மருத்தவர் வீரபாபு குறிப்பிட்டுள்ளார். சிகிச்சைக்காக சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு முதல் 3 நாட்கள் வரை கொரோனா தொற்று இருக்கிறது. மொத்தம் 7 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அவர்கள் வீடு திரும்புவதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : paranoia doctor ,recovery ,Corona ,doctor ,Siddha , Corona, Siddha Medicine, treatment, Siddha doctor
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...