×

கொரோனா அதிகரிப்பு எதிரொலி; இ-பாஸ் இன்றி பைக், ஆட்டோவில் செல்ல சென்னை வாசிகளுக்கு செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடியில் அனுமதி மறுப்பு

சென்னை: சென்னையில் இருந்து இதர மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் செங்கல்பட்டிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்டுகிறது. முறையான அனுமதி சீட்டு உள்ள இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்டுகிறது. செங்கல்பட்டு அருகே உள்ள பரனுர் சுங்கசாவடியில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்த காரணத்தினால் சென்னையில் இருந்து இருசக்கர வாகனங்கள் மூலம் மக்கள் குடும்பத்துடன் தென்மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி சாலையில் அதிகமாக பயணிக்கின்றனர்.

அதில் பெரும்பாலான நபர்களிடம் இ பாஸ் என்பது இல்லை. இதனால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இ பாஸ் இல்லாமல் வரும் அனைத்து வாகனங்களையும் மீண்டும் சென்னைக்குள் திருப்பி அனுப்பி வைக்கிறார்கள். தற்போது சென்னையில் உள்ள மக்களுக்கு இ பாஸ் கிடைப்பதற்கான வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. அதனால் இருசக்கர வாகனத்தில் பொதுமக்கள் அதிக அளவில் சென்னையில் இருந்து செல்கின்றனர். அதேபோல் நாளுக்குள் நாள் கொரோனாவின் வீரியம் அதிகரித்து வருகிறது.

பெரும்பாலானோர் சென்னையில் வசிப்போர் தென்மாவட்டங்களை சார்ந்தோர் என்பதால் இருக்கசக்கர வாகனத்தில் 2 அல்லது 3 பேர் இ பாஸ் இல்லாமல் செல்கின்றனர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். அவர்களுக்கு எந்தவிதமான அபராதமும் விதிக்கப்படவில்லை. மேலும் பல பேர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். தற்போது மருத்துவ துறையினர் அந்த பகுதிக்கு அனுப்பி அங்கு வரக்கூடிய நபர்களை முழுமையாக பரிசோதனை செய்து ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அவர்களை அங்கேயே தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.


Tags : residents ,Chennai ,Chengalpattu Paranur , Corona, E-Pass, Chennai, Chengalpattu, Paranur Sungachavadi
× RELATED வாய்க்கால் பாலம் இடிப்பு விவகாரம்: இரவு நேரத்தில் பொதுமக்கள் போராட்டம்