×

இந்திய-நேபாள எல்லையில் இந்தியர்கள் மீது அந்நாட்டு போலீசார் துப்பாக்கிச்சூடு..: ஒருவர் பலி, மூவர் காயம்-எல்லையில் பதற்றம்!

பாட்னா: இந்திய-நேபாள எல்லையில் இந்தியர்கள் மீது அந்நாட்டு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியத்தில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 8:40 மணியளவில் பீகாரைச் சேர்ந்த ஒரு குடும்பம் நேபாளத்திற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்திய நேபாள எல்லையில் பாதுகாப்புப் படையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்தக் குடும்பத்தினரை திரும்பிச் செல்லும்படி நேபாள போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் அந்தக் குடும்பத்தினருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து சுமார் 15 முறை சுட்டுள்ளார். இதில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர் மற்றும் ஒருவர் உயிரிழந்தார்.

கொல்லப்பட்டவர் 25 வயதான விகேஷ் குமார் ராய் என்று பீகார் கூடுதல் டிஜிபி ஜிதேந்திர குமார் பாட்னாவில் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் வினோத் ராமின் மகன் உமேஷ் ராம், பிந்தேஷ்வர் ஷர்மாவின் மகன் உதய் ஷர்மா, சஹோரவாவில் வசிக்கும் நபர் ஆகியோர் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த பகுதியில விவசாய நிலம் தொடர்பாக அடிக்கடி இருதரப்பு உரசல் ஏற்படுவதாகவும், நேபாள எல்லையை கடக்க முயன்றவர்களை விரட்ட கடந்த 17ம் தேதி நேபாள போலீஸ் வானை நோக்கி சுட்டதாகவும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே, எல்லை பிரச்சனை காரணமாக இருநாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது அங்கு நிலைமை சீராகியுள்ளதாக சசாஸ்திர சீமா பாலின் பாட்னா எல்லைப்புற இன்ஸ்பெக்டர் ஜெனரல்(ஐ.ஜி) சஞ்சய் குமார் கூறியுள்ளார்.


Tags : Indian ,Nepal ,Indians ,Indo ,border ,police fire , India, Nepal, range, shooting, dead, Bihar
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...