×

இறுதிக் கட்டத்தில் கொரோனா தடுப்பூசி .. மக்கள் மருத்துவமனைகளுக்கு வராமல் இருக்கும் நிலையை எட்டும் நோக்கில் உருவாக்கம் என நிறுவனம் நம்பிக்கை!!

வாஷிங்டன் : மக்கள் மருத்துவமனைகளுக்கு வராமல் இருக்கும் நிலையை எட்டும் நோக்கில், கொரோனாவை தீவிரமாக தடுக்கும் தடுப்பூசி உருவாக்கப்படும் எனவும் மாடர்னா நம்பிக்கை தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தடுக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை, மேலும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி உருவாக்க 12-18 மாதங்கள் ஆகலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனிடையே கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதிலும் பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதில் குறிப்பாக அமெரிக்கா - சீனா இடையே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் மாடெர்னா (Moderna) பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் 30,000 பேரிடம் தடுப்பூசியை சோதித்துப் பார்க்க உள்ளதாகவும் அது கூறியுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்சில் இருக்கும் இந்த நிறுவனம் தனது தடுப்பூசி ஆய்வின் முதன் இலக்காக, அறிகுறிகளுடன் வரும் கொரோனா தொற்றை தடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.இரண்டாம் கட்டமாக, மக்கள் மருத்துவமனைகளுக்கு வராமல் இருக்கும் நிலையை எட்டும் நோக்கில், கொரோனாவை தீவிரமாக தடுக்கும் தடுப்பூசி உருவாக்கப்படும் எனவும் மாடெர்னா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி இந்த ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2021 இன் ஆரம்பத்தில் கிடைக்கும்.

Tags : company ,hospitals , End stage, corona, vaccine, people, hospital, institution, trust
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...