×

கொரோனா கட்டுக்குள் வரும் வரை சுற்றுப்பயணம் இல்லை; இலங்கை மற்றும் ஜிம்பாவே தொடர்களில் இந்திய அணி பங்கேற்காது; பிசிசிஐ

டெல்லி: இலங்கை மற்றும் ஜிம்பாவே தொடர்களில் இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் இறுதி மற்றும் அடுத்த மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த போட்டிக்கான தேதி இறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டித் தொடர் இப்போதைக்கு ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி இன்னும் பயிற்சியை தொடங்கவில்லை. சர்வதேச பயண கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என்பது தெரியவில்லை.

எனவே ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த போட்டி தொடரில் இந்திய அணி பங்கேற்க சாத்தியமில்லை என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து விட்டோம். பின்னர் வரும் நாட்களில் இந்த போட்டி தொடரில் விளையாடுவதாக உறுதி அளித்துள்ளோம் என நேற்று தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று ஜிம்பாவே தொடரிலும் இந்திய அணி பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று பிசிசிஐ கூறியதாவது; இலங்கை மற்றும் ஜிம்பாவே தொடர்களில் இந்திய அணி பங்கேற்காது.

கொரோனா கட்டுக்குள் வரும் வரை இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது என தெரிவித்துள்ளது. இதேபோல் இலங்கை கிரிக்கெட் வாரியம்; கொரோனா வைரஸ் பரவியுள்ள இந்த சூழ்நிலையில் இந்திய வீரர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்வது சாத்தியமில்லை என்று பிசிசிஐ எங்களிடம் தெரிவித்துள்ளது. மேலும்  கிரிக்கெட்டை மீண்டும் தொடங்குவதற்கான எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு இந்திய அரசு மற்றும் சுகாதார ஒழுங்குமுறை அதிகாரிகளிடமிருந்து ஆலோசனைகளை பெற வேண்டும் என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

Tags : team ,tour ,Zimbabwe ,BCCI ,Indian ,Sri Lanka ,No Tour ,Corona , Corona, tour, Sri Lanka, Zimbabwe, Indian team, BCCI
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...