×
Saravana Stores

காளையார்கோவிலில் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை கிராம மக்களே அகற்றினர்

காளையார்கோவில்: காளையார்கோவில் ஊராட்சிக்கு உட்பட் கிருஷ்ணாநகர் வழியாக செல்லும் நீர் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பை சிலையா ஊரணி கிராம பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி வேலி கம்பி மற்றும் தகர கொட்டகையை பிரித்து எறிந்தனர். காளையார்கோவில் அருகே உள்ளது சிலையா ஊரணி கிராமம். இந்த கிராமத்தில் கண்மாய்க்கு கிருஷ்ணாநகர் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதி வழியாக சுமார் 2 கி.மீ தொலைவில் இருந்து மழை காலங்களில் வரத்து கால்வாய் மூலம் கண்மாய்க்கு தண்ணீர் வரும். இதன் மூலம் சுமார் 200 ஏக்கர் நிலத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசயாம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணாநகர் அருகே தனிநபர் வரத்துகல்வாயை ஆக்கிரமித்து வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 2019ம் ஆண்டு அக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்வழிப்பாதைகளை முறைப்படுத்தவும் நீதிமன்றம் தீரப்பு வழங்கியது. இந்நிலையில் தனிநபர் தான் ஆக்கரமித்த இடத்தில் நீதிமன்ற ஆணையை மீறி கிராவல் மண் கொட்டி தகர செட் அமைத்தும், பட்டிய கற்களை ஊன்றி, இரும்பு வலை வேலியும் அமைத்துள்ளார். இதனால் கண்மாய்க்கு தண்ணீர் செல்வது தடைபடுவதால், விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி சிலையாஊரணி கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரித்து வேலி கற்கள், கம்பி வலைகள் மற்றும் தகர செட்டுகளை கூண்டோடு அகற்றனர்.

மேலும் அரசு அதிகாரிகள் தனி நபருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள் விவசாயிகளின் நலன் காக்க வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை முழுமையாக சீர் செய்து, தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிலையாஊரணி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கூறுகையில், ‘ஆங்கிலேயர் காலத்தில் இருந்து எங்கள் ஊரில் உள்ள கண்மாய்க்கு இதே வழித்தடத்தில் நீர்வரத்து வந்து கொண்டு இருக்கின்றது. இதற்கான அரசு பதிவேட்டில் உள்ள வரைபடம் எங்களிடம் உள்ளது. தற்போது நீர்வரத்துக் கால்வாயை தனி நபர் ஆக்கிரமித்ததால் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றி உள்ளோம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்கள் கிராமத்திற்கான நீர்வழி வரத்துக்கால்வாயை மீட்டு தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : canal ,Kaliyarikovil ,Invasion ,The Canal , In Kaliyarikovil, the canal and the villagers
× RELATED திருநெல்வேலி மாவட்டத்தில் பாசன...