×

கொரோனாவால் இறப்போரின் சடலங்கள் விலங்குகளை விட மோசமாக விதத்தில் அடக்கம் செய்யப்படுகிறது : நீதிபதிகள் வேதனை!!

டெல்லி : கொரோனா நோயால் இறப்பவர்களின் உடல்களை கையாளும் விதம் குறித்து தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்கள் கவுரவமாக கையாளப்படவில்லை என கண்டனம் தெரிவித்த நிலையில்,ஊடகங்களில் வந்த தகவல்களை சுட்டிக்காட்டி உடல்கள் கையாளும் முறை இதுதானா என்று கேள்வி எழுப்பியுள்ளது. குறிப்பாக டெல்லியில் கொரோனாவால் இறப்போரின் சடலங்கள் விலங்குகளை விட மோசமாக அடக்கம் செய்வதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் குப்பைத் தொட்டியில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது குறித்தும் நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து மாநில, மத்திய அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசின் தலைமை செயலாளரும் பதிலளிக்க ஆணையிட்டுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் உடல் அடக்கம் தொடர்பான வழக்கில் புதன்கிழமை விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை அன்றைக்கு ஒத்திவைத்தனர்.


Tags : corpses ,death ,Corona ,judges , Corona, corpses, animals, burial, judges, torment
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...