×

புருண்டி அதிபர் திடீர் மரணம் கொரோனா வைரஸ் தொற்றா? அதிர்ச்சியில் மக்கள்

புஜூம்பரா: புருண்டி நாட்டு அதிபர் பியரி குருன்சிஸா திடீரென மரணம் அடைந்துள்ளார். அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படும் நிலையில், கொரோனா நோய் தொற்றால் இறந்தாரா என சர்ச்சை எழுந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டி நாட்டின் அதிபர் பியரி குருன்சிஸா (55).  சில நாட்களுக்கு முன்னர்தான் இவருடைய மனைவி டெனிஸ், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. அவர் சிகிச்சைக்காக கென்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  இந்நிலையில், அதிபர் பியரி குருன்சிஸா நேற்று திடீரென இறந்தார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அதிபரின் மனைவி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், குருன்சிஸாவுக்கும் கொரோனா தாக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால், அவரது மரணம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது, அதிபரின் இந்த திடீர் மரணத்தால் புருண்டி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2005ம் ஆண்டு முதல் முறையாக அதிபரானவர் பியரி. 2015ம் ஆண்டு அதிபராக அவர் பதவியேற்றபோது மக்கள் போராட்டம் வெடித்தது. பல ஆயிரம் மக்கள் நாட்டை விட்டுவெளியேறினார்கள். சமீபத்தில் நடந்த தேர்தலில் எவரிஸ்ட் நதைஷிமியே என்பவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பியரி குருன்சிசா போட்டியிடவில்லை. ஆகஸ்ட் மாதம் அதிபர் பதவி முடியவுள்ள நிலையில் அதிபர் மரணமடைந்துள்ளார்.

Tags : death ,Burundi ,President , Burundi Chancellor, Death, Corona
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...