×

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழக சுகாதாரத்துறை செயலாளராக நியமனம் : பீலா ராஜேஷ் வணிக வரித்துறைக்கு மாற்றம்

சென்னை : தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை வணிக வரித்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகின்றது. தற்போது தமிழகம் முழுவதும் 38,716 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலை கையாளும் வகையில் ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலாளராக மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

தற்போது ஜெ. ராதாகிருஷ்ணன் வகித்து வந்த வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் ஜெ. ராதாகிருஷ்ணன் கூடுதலாகக் கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் தற்போது கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக உள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன், ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளராக இருந்த அனுபவம் உடையவர்.2012-2019 வரை சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியவர் ராதாகிருஷ்ணன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். 2004ம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கிய போது, நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணனின் பணி பலராலும் பாராட்டப்பட்டது.

Tags : Jay ,Radhakrishnan ,Jayalalithaa ,Health Secretary ,Nadu , Jayalalithaa, Hope, J. Radhakrishnan, Tamil Nadu Health Department, Secretary, Appointment, Beela Rajesh, Business Tax Department, Transition
× RELATED கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து...