×

கொரோனா காலணி

நன்றி குங்குமம் முத்தாரம்

ரோமானியாவில் புகழ்பெற்ற ஷூமேக்கர் கிரிகோர் லுப். 16 வயதில் காலணி தயாரிப்புத் தொழிலுக்கு வந்தவர் தனது 55 வயதிலும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். கொரோனா லாக்டவுன் முடிவடைந்து இப்போது மக்கள் வெளியே நடமாட ஆரம்பித்துள்ளனர். அப்படி நடமாடுபவர்களில் பெரும்பாலானோர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை மற்றும் முற்றிலும் கொரோனா ஒழிக்கப்படவில்லை என்பதால் சமூக இடைவெளி என்பது அவசியமானதாக உள்ளது.

மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பதைக் கவனித்திருக்கிறார் கிரிகோர். தவிர, நெருக்கமாக உலாவுவதையும் பார்த்துள்ளார். மக்கள் மத்தியில் சமூக இடைவெளியை ஏற்படுத்த புதுவகையான காலணியைத் தயாரித்திருக்கிறார் கிரிகோர். இந்தக் காலணியை அணிந்த இருவர் சந்திக்கும்போது இயல்பாகவே அவர்களுக்கு இடையே ஒன்றரை மீட்டர் இடைவெளி விழும். எப்படி என்கிறீர்களா? படத்தில் உள்ள ஷூவைப் பாருங்கள்.


Tags : Corona , Corona shoes
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...