×

தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் ஊர் பெயரை எழுதும் வகையில் மாற்றம்: தமிழக அரசின் அரசிதழில் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவது தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசிதழில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்கும் வகையில் அந்தந்த மாவட்ட கலெக்டர்களை தலைவர்களாக கொண்ட உயர்நிலை குழுவும் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சரின் தலைமையில் ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழு கூட்டத்தின் முடிவுக்கு இணங்க மாவட்ட கலெக்டர்களின் பரிந்துரைகளின்படி தமிழ் ஒலி வடிவங்களுக்கேற்ப ஆங்கிலத்தில் எழுத்து மாற்றம் செய்யப்பட்டு 1018 ஊர்களின் பெயர்களை மாற்றம் செய்ய அரசு முடிவு செய்து ஆணை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாற்றப்பட்ட ஊர்களின் பெயர்கள் வருமாறு

ஊர் பெயர்    ஆங்கிலத்தில் தற்போது        மாற்றப்பட்டது
தண்டையார்பேட்டை    TONDIYARPET        THANDAIYAARPETTAI
புரசைவாக்கம்        PURASAWALKAM        PURASAIVAAKKAM
வேப்பேரி            VEPERY            VEPPERI
வ.உ.சி நகர்        V.O.C.NAGAR        VA.OO.SI.NAGAR
கொடுங்கையூர்        KODUNGAIYUR        KODUNGAIYOOR
எருக்கஞ்சேரி        ERUKKENGHERI        ERUKKANJERY
மல்லிகைசேரி        MALLIKAICHERI        MALLIKAICHCHERI
செஞ்சேரி            SENCHERI        SENJERI
சிந்தாதிரிப்பேட்டை        CHINTADRIPET        CHINTHADHARIPETTAI
மயிலாப்பூர்        MYLAPORE        MAYILAPPOOR
சைதாப்பேட்டை        SAIDAPET        SAITHAAPPETTAI
ஈக்காட்டுதாங்கல்        EKKATTUTHANGAL    EEKKATTUTHAANGAL
கிண்டி பூங்கா        GUINDY PARK        GINDI POONGAA
மடிப்பாக்கம்        MADIPAKAM        MADIPPAKKAM
காரப்பாக்கம்        KARAPAKKAM        KAARAPPAKKAM
சோழிங்கநல்லூர்        SHOLINAGANALLUR    SOLINGANALLOOR
உத்தண்டி            UTHANDI        UTHTHANDI
மதனந்தபுரம்        MADANANDAPURAM    MADHANANDAPURAM
மணப்பாக்கம்        MANAPPAKKAM        MANAPPAAKKAM
நந்தம்பாக்கம்        NANDAMBAKKAM    NANDAMBAAKKAM
ஆதம்பாக்கம்        ADAMBAKKAM        AADHAMBAAKKAM
தலக்கணாஞ்சேரி        THALAKANANCHERI    THALAKKANAANJERI
அம்பத்தூர்        AMBATTUR        AMBATHTHOOR
காக்காப்பள்ளம்        KAKKAPALLAM        KAKKAAPPALLAM
புத்தகரம்            PUTHAGARAM        PUTHTHAGARAM
வடபெரும்பாக்கம்        VADAPERUMBAKKAM    VADAPERUMBAAKKAM
விளக்குப்பட்டு        VILLAKUPATTU        VILAKKUPPATTU
மாத்தூர்            MATHUR        MAATHTHOOR
எலந்தஞ்சேரி        ELANDANCHERY        ELANDHANJERY
சடையங்குப்பம்        SADAYANKUPPAM    SADAIYANGUPPAM

Tags : town ,Government of Tamil Nadu ,English ,Tamil , Tamil pronunciation, English town name, Tamil Nadu government, publication
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...