×

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!! : 12 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நேரத்தில் அணை திறப்பால் காவிரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் : காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் முதல்வர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது.  இந்த விழாவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், தங்கமணி, சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.

*86 ஆண்டுகளுக்கு முன்பு 4 கோடியே 80 லட்ச ரூபாயில் காவிரியின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட மேட்டூர் அணைதான் டெல்டா மாவட்டங்களின் பிரதான நீராதாரம்.

*அதிகபட்சம் 120 அடிக்கு நீர்தேக்கி 93.47 டிஎம்சி நீரை இருப்பு வைப்பதால் காவிரி டெல்டா நெற்களஞ்சியமாய் திகழ அணையும் ஒரு காரணமாகிறது.

*டெல்டா பாசனத்திற்காக வழக்கமாக தண்ணீர் திறக்க வேண்டிய தேதி ஜூன் 12. அப்படித் திறந்தால் ஜனவரி 28 வரை 231 நாட்களுக்கு 300 டிஎம்சி அளவுக்கு காவிரி கடைமடைக்கும் பயணித்து பயிர்களின் தாகத்தையும் உயிர்களின் பசியையும் போக்கும்.சேலம், ,நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை , திருவாரூர், கடலூர் , பெரம்பலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16 புள்ளி 05 லட்சம் ஏக்கர் நிலங்களை செழிப்பாக்குறது மேட்டூர் அணையின் நீர். இதில் குறுவை, சம்பா, தாளடி என முப்பருவ நெல் சாகுபடி நடைபெறும்.

*பாசனத்திற்கு நீர் திறக்க அணையில் நீர்மட்டம் 90 அடிக்கு மேலாகவும், நீர் இருப்பு 60 டிஎம்சிக்கு மேலாகவும் இருக்க வேண்டும். நீர்வரத்தையும் நீர் இருப்பையும் பொறுத்தும் அணை திறக்கும் தேதி மாறுபடும்.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம்.

*ஆனால் அணையில் நீர் குறைவாக இருப்பது, காவிரி நதிநீர் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் ஜூன் 12-ம் தேதி திறக்க முடியாத சூழ்நிலை உருவாகும். மேட்டூர் அணையில் தற்போது, 101.70 அடி நீர் மட்டம் உள்ளது

*மேட்டூர் அணை கட்டப்பட்ட 86 ஆண்டுகளில் இதுவரை 15 ஆண்டுகள் மட்டுமே ஜூன் 12-ம் தேதி இதுவரை அணை திறக்கப்பட்டுள்ளது.

*கடைசியாக 2008-ம் ஆண்டு தான் ஜூலை 12-ம் தேதி அணை திறக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 101.73 அடி; அணையின் நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.யாக உள்ளது. நீர் திறப்பால் காவிரி டெல்டா மாவட்டங்களில் 5.24 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.மேட்டூர் அணையில் முதல் கட்டமாக வினாடிக்கு 2000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.

Tags : irrigation farmers ,opening ,Mettur Dam Cauvery ,Palanisamy ,dam , Mettur Dam, CM Palanisamy, 12 years, Cauvery irrigation, farmers, happiness
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு