×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு143 சிறை கைதிகளின் நிலை என்ன?: தேர்வுக்கு தயாரான நிலையில் குழப்பத்தில் தவிக்கும் அவலம்

சென்னை:தமிழகத்தில் சென்னை, புழல், வேலூர், கடலூர், திருச்சி, கோவை, சேலம், மதுரை, பாளையங்கோட்டை   உள்ளிட்ட ஒன்பது சிறைச்சாலைகள் உள்ளன. இங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவது கடந்த 2009ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் 9 சிறைச்சாலைகளிலும் உள்ள 13 பெண் கைதிகள் உள்ளிட்ட 143 கைதிகள் தேர்வு எழுத மனு செய்து அதற்கான ஏற்பாடுகளில் சிறை துறையினரும் ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் வரும் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்காக தமிழக அரசும் கல்வித்துறையும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வந்தன.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு மற்றும் உயர் நீதிமன்றம் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை கொண்டு வருகைப் பதிவு வைத்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில் சிறைச்சாலைகளில் தேர்வு எழுத தயார் நிலையில் இருந்த கைதிகளின் நிலை என்ன என்று தெரியாமல் சிறைத்துறை அதிகாரிகளும்,  அந்தந்த சிறை ஆசிரியர்களும் தவித்து வருகின்றனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மற்றும் வருகை பதிவும் இல்லை. எனவே இவர்களின் நன்னடத்தை கருத்தில் கொண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுமா அல்லது இவர்களுக்கென தனியாக தேர்வு நடத்தப்படுமா என சிறை கைதிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


Tags : prison inmates , 10th class elections canceled, 143 prisoners
× RELATED சுதந்திர தின பொன்விழா ஆண்டையொட்டி 4வது...