ககன்யான் விண்கலத்தை ஏவும் திட்டம் ஒத்திவைப்பு

பெங்களூரு: இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறியிருப்பதாவது: இஸ்ரோவின் எதிர்கால செயல்பாடுகள், நடப்பு  நிதியாண்டில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் பட்டியலிடப்பட்டு, அதன்படி பணிகள் நடந்து வருகின்றன. விண்ணிற்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் ககன்யான் திட்டத்திற்கு முன்பாக ஆளில்லா விண்கலம் விண்ணிற்கு அனுப்பி வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.  இந்த வருட கடைசியில் ஆளில்லா விண்கலத்தை செலுத்த முடிவு செய்யப்பட்டது. கொரோனா  காரணமாக அடுத்த வருடம் இத்திட்டம் அமலாகும்.கொரோனா மேலும் தொடர்ந்தால் இஸ்ரோவின் ஒட்டுமொத்த திட்டங்களை அமல்படுத்துவதிலும் மாற்றம் ஏற்படும் என்றார்.

Related Stories:

>