×

திருவள்ளூர் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஜெ. அன்பழகன் எம்எல்ஏ படத்துக்கு மலர்தூவி மரியாதை: ஆவடி நாசர், கும்மிடிப்பூண்டி வேணு பங்கேற்பு

ஆவடி: சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருவல்லிகேணி- சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் உடல்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இதனை அடுத்து, ஆவடி மாநகர திமுக கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன், ஆவடி மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன், வட்ட செயலாளர்கள் ஆவடி பாலா, பா.யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் மறைவை ஒட்டி இரண்டாவது நாளாக கவரப்பேட்டை மாவட்ட அலுவலகத்தில் உள்ள அவரது படத்துக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி. வேணு மலர் தூவி மரியாதை செய்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவி கே. வி. ஜி. உமாமகேஸ்வரி, கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு துணை தலைவி கு.மாலதி மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார்,

பொதுக்குழு உறுப்பினர் பா. செ. குணசேகரன் கிழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், ஒன்றிய கவுன்சிலர் இந்திரா திருமலை, பேரூர் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி சாந்தி, அணிகளின் நிர்வாகிகள் சுரேஷ், சரண்ராஜ், உள்ளிட்டோர் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். அதேபோல் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி. ஜே.கோவிந்தராஜன், மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன் அவரவர் வீடுகளில் ஜெ. அன்பழகன் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மலர் தூவி மரியாதை செய்தனர்.

Tags : Thiruvallur District Flower ,Anbalakaran ,Thiruvallur District ,Mathrubhumi Courtesy ,Aadi Nasser Anbazhagan MLA , Thiruvallur South, Northern District DMK, J. Anubhagan MLA, Multruvi courtesy, Awadi Nasser, Gummidipoondi Venu
× RELATED மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை.! எம்எல்ஏ கருணாஸ்