×

ஏலகிரிமலை கிராமத்தில் 4 மரங்கள் பின்னிபிணைந்த அதிசய மரம்: தொட்டால் உயிர்பறிக்கும்

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் சுமார் 500 ஆண்டுகளாக 4 மரங்களுடன் ஒரு அதிசயம் மரம் வளர்ந்து நிற்கிறது. இதுபற்றிய அறிய தகவல் வருமாறு; திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இந்த மலை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. எப்போதும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் இங்கு சுற்றுலாப் பயணிகள் தங்கி செல்வதையே விரும்புவார்கள். ஏலகிரிமலை நான்குபுறமும் மலைகளால் சூழப்பட்டு 14 கிராமங்களை உள்ளடக்கிய தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இவர்களின் முக்கிய தொழில் விவசாயம்.

இம்மலையில் உள்ள அத்தனாவூர் கிராம பஸ் நிறுத்தத்தில் ஓங்கி உயர்ந்த ஒரு மரம் உள்ளது. இதில் நான்கு மரங்கள் ஒன்றாக இணைந்துள்ளது. இந்த மரத்தின் வயது சுமார் 500 இருக்கும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர். இதுபற்றி கிராம பெரியவர்கள் கூறியதாவது: இந்த மரம் வித்தியாசமானது. சிறிது நேரம் உன்னிப்பாக பார்த்தால் நம்மிடம் ஏதோ ஒருவிதமான உணர்வை ஏற்படுத்தும். இந்த மரத்தில் அரசமரம், முட்லி மரம், பேய் மிரட்டி மரம், ஜி மரம் ஆகிய 4 மரங்களும் ஒன்றிணைந்து ஒரே மரம்போல் வளர்ந்துள்ளது. இந்த மரத்தடியில் மூதாட்டி பொன்னியம்மாள் என்பவர் சூலம் வைத்து பூஜை செய்து வந்தார்.

100 வயது முடிவடைந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அந்த மூதாட்டி இறந்துவிட்டார். இந்த இடதை தனிநபர் ஒருவர், வேறு ஒருவருக்கு மரத்துடன் விற்பனை செய்துள்ளார். இதை விற்றவர் சிறிது நாட்களிலேயே உடல்நிலை பாதித்து இறந்தார். அந்த இடத்தை வாங்கியவர் இந்த மரத்தை வெட்ட முயன்றுள்ளார். அவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். நெடுஞ்சாலைத்துறையினர் சில ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கத்திற்காக இந்த மரத்தை வெட்டி அகற்ற முயன்றனர். உயிரிழப்பு சம்பவங்களை கேள்விப்பட்ட அவர்கள் இந்த முயற்சியை கைவிட்டனர். இதனால் இந்த அதிசயமரத்தை ஏராளமானவர்கள் வணங்கிவிட்டு செல்கின்றனர். வினோத மரத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எங்கள் பகுதி மக்கள் பூஜித்து வருகிறோம். இவ்வாறு கூறினர்.

Tags : village ,Elakirimalai , The village of Elagirimala, the wonder tree, touches the life
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...