×

பைபர் படகுகளில் எடுத்துச் சென்று மரக்கிளைகளை கடலுக்குள் இறக்கி நூதனமாக மீன்பிடிக்கும் மீனவர்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் பைபர் படகுகளில் மரக்கிளைகளை கடலுக்குள் எடுத்துச் செல்லும் மீனவர்கள் அதைக் கொண்டு நூதன முறையில் தூண்டில் போட்டு மீன்பிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24ம்தேதி முதல் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் முடங்கியிருந்த மீனவர்கள், தடைகாலம் முடிந்து ஜூன் 5ம்தேதி முதல் கடலுக்கு சென்றனர். விசைப்படகுகள், பைபர் படகுகள், கட்டுமரத்தில் மீன்பிடித்து கரைதிரும்பி வருகின்றனர். இருப்பினும் எதிர்பார்த்த மீன்கள் இதுவரை சிக்காததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.

இதனிடையே தூண்டில் போட்டு மீன்பிடிக்கும் மீனவர்கள் தற்போது புதிய முறையில் மீன்களை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.  அதாவது தங்களது பைபர் படகில், கரையில் இருந்து மரக்கிளைகளை வெட்டி எடுத்துச் செல்கின்றனர். அதை கடலுக்குள் நீரோட்டம் உள்ள பகுதியில் கல்கட்டி இறக்கி அப்பகுதியில் தூண்டில் போட்டு மீன்களை பிடித்து வருகின்றனர். இதில் விலையுயர்ந்த வஞ்சிரம், கொடூவா உள்ளிட்ட மீன்கள் சிக்குவதால் இம்முறையை அவர்கள் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இருப்பினும் மீன்பிடிப்பதற்காக மரக்கிளைகளை மீனவர்கள் வெட்டி எடுத்துச் செல்வதற்கு தன்னார்வ அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக வனத்துறையிடம் சிலர் முறையிட்டுள்ளதாக தெரிகிறது.


Tags : Fishermen ,Piper ,sea , Piper boat, woodpecker, fishermen
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...