முகக்கவசம் உற்பத்தி, விற்பனை தொடர்பாக விதிமுறை உருவாக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சென்னை: முகக்கவசம் உற்பத்தி, விற்பனை தொடர்பாக விதிமுறை உருவாக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ரமணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தொற்று ஏற்படாமல் இருக்க முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. முகக்கவசங்கள் விலை, தரம், காலாவதி தேதி பற்றி மத்திய, மாநில அரசுகள் இதுவரை உருவாக்கவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

>