×

பெங்களூரில் ஊரடங்கு தளர்வு எதிரொலி.: 3 மாதங்களுக்கு பிறகு உயிரியல் பூங்கா திறப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களுருவில் ஊரடங்கு தளர்வு எதிரொலியாக 3 மாதங்களுக்கு பிறகு  பன்னார்கட்டா உயிரியல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. பொது போக்குவரத்துக்கு அனுமதி வணிக வளாகங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பன்னார்கட்டா உயிரியல் பூங்கா 3 மாதங்களுக்கு பின்னர் இன்று திறக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சமூக இடைவெளி உடன் பூங்காவை சுற்றி பார்க்க வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது. புலி, சிங்கம், யானை உள்ளிட்ட வனவிலங்குகளை காண சுற்றுலா பயணிகளின் வருகையால் பன்னார்கட்டா உயிரியல் பூங்கா கலைக்கட்டியது.  சுற்றுலா பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே  சுற்றுலா பயணிகள் உயிரியல் பூங்கா உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 


Tags : zoo ,Bengaluru ,Opening ,The Zoo , Echoing , Bengaluru: ,zoo', months
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்