×

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை.: சென்னை ஐஐடி முதலிடம்

டெல்லி: மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.நாடு முழுவதும் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் முதலில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உள்கட்டமைப்பு, படித்து முடித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களின் வேலைவாய்ப்பு, கல்வியின் தரம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து கணக்கிட்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தரவரிசை பட்டியலை வெளியிடும்.இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெறுவதற்காக மொத்தம் 5805 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில்  சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. அதனையடுத்து 2-வது இடத்தை பெங்களூரில் இருக்க கூடிய ஐஐஎஸ்சி நிறுவனமும், 3-வது இடத்தை டெல்லியில் இருக்கக்கூடிய ஐஐடி இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai IIT ,institutions ,Center for Human Resources Development ,IIT Chennai , Center ,Human Resources, Development, IIT Chennai
× RELATED அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI...