×

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்: எளிமையான முறையில் நடைபெறும் எனத் தகவல்

டோக்கியோ: உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவால் வழக்கத்தை விட எளிமையான முறையில் அடுத்தாண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்தும் அமைப்பும் ஆன்லைன் வழியாக ஆலோசனை நடத்தி உள்ளனர்.  இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டோக்கியோ ஒலிம்பிக்கின் தலைமை செயல் அதிகாரி டோஷிரோ முடோ, வழக்கமான முறையில் பெரும் பொருட்செலவில் டோக்கியோ ஒலிம்பிக் நடைபெற வாய்ப்பிருக்காது என தெரிவித்தார்.

மேலும் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகளின் ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்யும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும், வீரர்கள், பார்வையாளர்கள் நீங்கலாக ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டமிட்டு வருவதாக அவர் கூறினார். அதாவது, விளையாட்டு சங்கங்களின் சில பிரதிநிதிகள், போட்டி அமைப்பாளர்கள் என பலர் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது. தனி மனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எடுக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tokyo Olympic Games ,Corona , Corona, Tokyo, Olympic Games, simplicity mode, information
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...